மகளிர் திட்ட அலுவலகத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு @Salem

மகளிர் திட்ட அலுவலகத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு Salem

சேலம் மாவட்டத்தில் வேலை செய்ய விருப்பமா? இந்த அறிவிப்பை முழுமையாக படித்து அறிந்துகொண்டு விருப்பம் இருந்தால் விண்ணப்பிக்க விரையுங்கள்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் அளித்துள்ளார்.

எம்.ஐ.எஸ் அனலிஸ்ட் பணியில் தற்காலிகமாக வேலை செய்ய பி.இ அல்லது பி.டெக்-இல் கணினி அறிவியல் அல்லது ஐ.டி அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் அல்லது முதுநிலை கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் அல்லது முதுநிலை அறிவியல் (ஐ.டி) அல்லது கணினி அறிவியல் அல்லது இதர முதுநிலை கணினி அறிவியல் தொடர்பான படிப்புகள் பயின்றிருக்க வேண்டும். குறிப்பாக, 30 வயதிற்குட்பட்டவராகவும், கணினி தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 3 வருட அனுபவமும் உடையவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு ஊதியம் மாதம் ரூ.25.000 வழங்கப்படும்.

Also Read: மாதம் ரூ.16,000 – ரூ.20,000 ஊதியத்துடன் இலவச அழகுக்கலை பயிற்சி

நவம்பர் 15 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் வழியிலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும்.

அஞ்சல் முகவரி:

Joint Director,
Room No: 207,
District Mission Management Unit,
Collectorate Campus,
Salem-636001.

Scroll to Top