ஏறிக்கொண்டே கொண்டே செல்லும் வெங்காயத்தின் விலை – அதிர்ச்சியில் மக்கள்

ஏறிக்கொண்டே கொண்டே செல்லும் வெங்காயத்தின் விலை - அதிர்ச்சியில் மக்கள்

அனைத்து இடங்களிலும் பெய்த தொடர் மழையால் கடந்த சில மாதங்களில் வெங்காயத்தினுடைய விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதுமட்டுமில்லாமல், வெங்காயத்தின் ஏற்றுமதி தடை நீக்கம் உள்ளிட்ட காரணத்தால் வெங்காயத்தினுடைய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர ஏழை எளிய மக்கள் வெங்காயம் வாங்க முடியாமல் தவிக்கிறார்கள்.

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. இன்று, வெங்காயத்தின் விலை 100 ரூபாய் எட்டியுள்ளது.

Also Read: IIM Trichyயில ஆறு காலியிடங்கள் அறிவிப்பு – Apply Online Here

இதன் காரணமாக சில்லறை காய்கறி கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் 120 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில வாரங்களுக்கு இதே விலை தான் நீடிக்க வாய்ப்பு உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தின் விலை தொடர்ந்து எகிறுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.

Scroll to Top