சூப்பர் ஸ்டார் ரஜினி படம் என்றாலே ரசிகர்களுக்கு சந்தோசம் தான். தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த்தின் 171 ஆவது படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்திற்கு கூலி என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். கூலி படத்தில் தேவா என்ற பெயர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து கொண்டிருக்கும் முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். கூலி திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது.
செயறு நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இப்போது குணமடைந்த ரஜினிகாந்த் கூலி படத்தின் படப்பிடிப்பில் மறுபடியும் இணைந்துள்ளார். கூலி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், கூலி படத்தில் சிவகார்த்திக்கேயன் நடிக்க உள்ளதாக தகவல் ஓன்று வெளியானது. சிவகார்த்திக்கேயன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
Also Read: Today Gold Rate: இன்றைய நிலவரப்படி, தங்கம் கொஞ்சம் விலை குறைந்துள்ளது
அமரன் படம் வெற்றி கொண்டாட்டத்தின் நேர்காணல் ஒன்றில் சிவகார்த்திக்கேயன் இதற்கு பதிலளித்துள்ளார். என்னுடைய வீட்டிற்கு எதிரில் தான் கூலி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அமரன் படத்தினுடைய புரமோஷன் வேலைகள் இருந்த காரணத்தால் படபிடிப்பு நடக்கும் இடத்திருக்கு என்னால் செல்ல முடியவில்லை. நான் அந்த படத்தில் நடிக்கவில்லை. கூலி எனது தலைவர் ரஜினிகாந்த் நடிக்கும் படம். தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் எனது கூறியுள்ளார் சிவகார்த்திக்கேயன்.