AAI Recruitment 2024: இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை செய்ய ஆசையா உங்களுக்கு? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! Junior Consultant என்னும் வேலைக்கு 06 காலி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. எனவே ஆர்வம் உள்ள நபர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களை அறிய தொடர்ந்து படியுங்கள்.
Airports Authority of India நிறுவனம் அறிவித்த ஜூனியர் ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் E3 / E4 / E5 அளவிலான பதவியில் பணியாற்றி, அதில் ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும். இதில், விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 70 வயதாவது இருக்க வேண்டும்.
Also Read – தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் (DHS) வேலை | 12th, B.Sc, Diploma, DMLT படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!
இப்பணிக்கு நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.50,000 கொடுக்கப்படும். எனவே இந்த வேலையில் சேர தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்படிவத்தினை பூர்த்தி செய்து அதனை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 22.11.2024 என்ற தேதிக்குள் அப்ளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.