அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் பூத் – சென்னை

அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் பூத் - சென்னை

சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையின், புற்றுநோய் பிரிவில் பணி புரிந்தவர் தான் டாக்டர் பாலாஜி. அவரை சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. காயமடைந்த அவருக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனால் போலீசார் விக்னேஷ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறது.

மேலும் விக்னேஷ் மீது 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் சென்னை மாநகர காவல் துறை முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இதனால் சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் பூத் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது. அதில் ஒவ்வொரு இடத்திலும் 10 போலீசார் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் உள்ள 29 மருத்துவமனைகளில் ஏற்கனவே 9 மருத்துவமனைகளில் போலீஸ் பூத்துகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் துறை மீதமுள்ள 10 மருத்துவமனைகளிலும் விரைவில் போலீஸ் பூத்துகள் அமைத்து தரப்படும் என தெரிவித்துள்ளது. இது மட்டும் இன்றி துப்பாக்கி ஏந்திய போலீசாரை சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

Scroll to Top