
ECHS-முன்னாள் ராணுவத்தினரின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம், வேலை வாய்ப்பு பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மருத்துவ அலுவலர், DEO, எழுத்தர், செவிலியர் பணிகளுக்கான அறிவிப்பு தான் இது. எனவே அரசு வேலையில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு தகவல்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள ECHS ஸ்டாஃப் நர்ஸ், ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிக்காக 35 காலியிடங்களை ஒதுக்கியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8th, Any Degree, B.Pharm, B.Sc, BDS, D.Pharm, Diploma, DMLT, Literate, MBBS, MD, MS, Nursing என எதாவது ஒன்று படித்திருந்தாலே போதுமானது. மேற்கண்ட கல்வி தகுதியுடையவர்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.16,800 முதல் ரூ.100,000 வரை வழங்கப்படும்.
பணியிடம்கோயம்புத்தூர் ஆகும். விண்ணப்பிப்போருக்கு வயது வரம்பு, விண்ணப்பக்கட்டணம் எதுவும் இல்லை.நேர்காணல் மூலம் வேலைக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் தபால் வழியாக மார்ச் 8-க்குள் விண்ணப்பித்துவிடுங்கள். பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ECHS Recruitment 2025 Official Notification pdf
அஞ்சல் முகவரி :
OIC,
Station Headquarters,
ECHS Cell,
Redfields,
Coimbatore-641018.
செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் ஜாயின் பண்ணிடுங்கள்.