Site icon Trending News360

அனுஷ்கா ஷெட்டி நடித்த காதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

அனுஷ்கா ஷெட்டி அருந்ததி படத்தில் நடித்து தன்னுடைய நடிப்பின் திறமையால் பிரபலமானவர் இவர். பல முன்னணி நடிகர்களுடன் அனுஷ்கா நடித்துள்ளார். பாகுபலி படம் அனுஷ்கா வாழ்க்கையில் முக்கிய படமாக இருந்தது. தமிழ் மொழியில் மட்டும் இல்லை மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். அனுஷ்கா நடித்த கடைசி படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி. இப்போது இவர் நடித்து முடித்துள்ள படம் தான் காதி. இப்படத்தை ஜாகர்லமுடி இயக்கியுள்ளார்.

Also Read: UPI பரிவர்த்தனையால் 4,000 ATM மூடிட்டாங்களாம்…

இன்று அனுஷ்காவின் பிறந்தநாள். தன்னுடைய 47வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் அனுஷ்கா. அனுஷ்காவின் பிறந்தநாளை மேலும் சிறப்பாக மாற்றிட காதி படக்குழுவினர் அனுஷ்காவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தினுடைய கிளிம்ஸ் வீடியோ இன்று மாலை நான்கு மணிக்கு வெளியாகும் என்று அதில் தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மீண்டும் அருந்ததியா என்று கமென்ட் செய்துகொண்டு இருக்கிறார்கள். அனுஷ்காவிற்கு காதி படம் வெற்றி படமாக அமைய அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள்.

Exit mobile version