தமிழகத்திலே வந்தே பாரத் ரயில் சேவையானது சென்னை, கோவை,நெல்லை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றது. இந்த வந்தே பாரத் ரயிலில் கட்டணம் அதிகமாக வசூல் செய்தாலும், மிக குறுகிய நேரத்தில் விரைந்து செல்லுவதால் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு டீ, காபி, உணவு, தண்ணீர், நியூஸ் பேப்பர் ஆகியவற்றை வழங்கி வருகின்றது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களில் நெல்லை to சென்னைக்கு வந்தே பாரத் சேவை இயங்கி வருகின்றது.
Also Read – தொடர்ந்து சரியும் தங்கம் விலை! இன்றைய தங்கம் நிலவரம் இதோ…!
இந்நிலையில், இன்றைய தினத்தில் 6 மணி அளவில் நெல்லை to சென்னைக்கு புறப்பட்டது. வழக்கம்போல பயணிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அந்த உணவில் கொடுக்கபப்ட்ட சாம்பாரில் வண்டுகள் இருப்பதாக பயணிகள் ரயில்வே அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம், சாம்பாரில் இருப்பது வண்டு இல்லை சீராக மசாலா என கூறியுள்ளனர். இதனை கேட்ட பயணிகள் வீடியோ எடுத்து ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளனர். சீரகத்தில் எப்படி தலை கால் இருக்கும் என்று ரயில்வே அதிகாரிகளிடம் கடும் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, சேலத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் வழங்கிய உணவில் தரம் இல்லாத காரணத்தால் அவர்களது சமையல் கூடத்தை ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் ஜாயின் பண்ணிடுங்கள்.