முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பணிக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பணிக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் க்ரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. இத்தேர்வுகள் மூலம் அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை வருடந்தோறும் நிரப்பி வருகிறது. தற்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Also Read: ஏறிக்கொண்டே கொண்டே செல்லும் வெங்காயத்தின் விலை – அதிர்ச்சியில் மக்கள்

பொதுப்பணித்துறை / குடிநீர் வடிகால் வாரியம் / நெடுஞ்சாலை / குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை / சிறு துறைமுகங்கள் துறை / தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகிய துறைகளில் பொறியாளர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட 246 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 20 பணியாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Scroll to Top