Site icon Trending News360

கலெக்டரின் முக்கிய அறிவிப்பு – கொடைக்கானல் மலைப்பாதையில் இந்த வாகனங்கள் செல்ல தடை

பொதுமக்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் மாவட்ட கலெக்டர் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி, கொடைக்கானல் மழைப்பாதைகளில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாநில போக்குவரத்து அதிகாரியின் இசைவுடன் பொதுநலன் கருதியும் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள்) திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு செல்லும் மலைப்பாதைகளின் தொடக்கப் புள்ளியை தாண்டிச் செல்லத் தடைவிதித்து உத்தரவிடப்படுகிறது. இந்த அறிவிப்பு 18.11.2024 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version