நடிகர் சல்மான் கானுக்கு மறுபடியும் ஒரு கொலை மிரட்டல் வந்துள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சல்மான் கான் பாலிவுட் நடிகர் ஆவார். கொலை மிரட்டல் செய்தவர்கள் சல்மான் கானிடமிருந்து 5 கோடி ரூபாய் கேட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வனவிலங்குகளை வேட்டையாடியதற்காக சல்மான் கான் எங்கள் பிஷ்னோய் சமூக கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் 5 கோடி ரூபாய் தர வேண்டும். அப்படியும் சல்மான் கான் செய்யாமல் விட்டால் அவரை கொண்டு விடுவோம் என்று கூறியுள்ளனர். இதனால் தற்போது சல்மான் கானுக்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் எடுத்துள்ளனர்.
Also Read: மாதம் 32000 ரூபாய் சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!!!
இந்த கொலை மிரட்டல் தொடர்பாக புனே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் ஹாவேரி மாவட்டத்தில் பிகாராம் பிஷ்னோய் என்பவரை கடந்த வாரம் போலீசார் கைது செய்தனர். மேலும், சோயில் பாஷா என்ற ஒரு நபரையும் கைது செய்து உள்ளனர். இவர்களிடம் ஒரு முழுமையான விசாரணை நடத்திய பிறகு இந்த கொலை மிரட்டல் பற்றிய பின்னணி தெரிய வரும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் இணைந்து பயன்பெறுங்கள்.