வங்கி பணியில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? அப்போ இந்த அருமையான வாய்ப்பு உங்களுக்கு தான். இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க. இந்த வேலை பற்றிய முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த வேலைக்கு தகுதியானவராக இருந்தாலும், ஆர்வமும் இருந்தால் உடனே வேலைக்கு அப்ளை பண்ணிடுங்க.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா Credit Officer/Assistant Manager பணியில் காலியிடங்களை அறிவித்துள்ளது. இப்பணியில் மொத்தம் 1000 காலியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. எனவே இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்க விரும்புவோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இதற்காக பிப்ரவரி 20 வரை மட்டுமே கால அவகாசம் தரப்பட்டுள்ளது.
கல்வித்தகுதியாக Any Degree படித்திருந்தாலே போதும் Credit Officer/Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்க முடியும். சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மாத சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இப்பணிக்கு தேர்வாகி விட்டால் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பணியாற்றலாம். அப்ளை செய்பவர்கள் ஈஸியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைன் தேர்வு,நேர்காணல் மூலம் Credit Officer/Assistant Manager பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். SC/ST/PWD பிரிவினர் விண்ணப்பக்கட்டணமாக 150 ரூபாயும், மற்ற பிரிவினர் 750 ரூபாயும் செலுத்த வேண்டும். இந்த வேலை பற்றிய முழு விவரங்களையும் அறிய Central Bank of India Recruitment Notification 2025 என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.
செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் ஜாயின் பண்ணிடுங்கள்.