கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? அப்போ இந்த நியூஸ் உங்களுக்குத்தான்!!!

Today News Do you use a credit card Then this news is for you

நாம் நமது பணத்தை வங்கியில் போடவோ அல்லது பிறருக்கு பணம் செலுத்தவோ நமது வங்கிக்கு நேரடியாக சென்று தான் இதனை செய்வோம். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் இந்த நிலை மாறிவிட்டது. காரணம் வளர்ந்து வரும் தொழிநுட்பம் தான். மக்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகியுள்ளது.

இதனால், ஆன்லைன் வழியாக பண பரிவர்த்தனை மாற்றம் மிக எளிதில் நடக்கின்றது. அதே போல மக்களின் நலனுக்காக வங்கிகளும் பல்வேறு சேவைகளை செய்து வருகின்றது. அந்தவகையில் கிரெடிட் கார்டு என்பது முக்கிய பங்கு வகிக்கின்றது. இதில் பண பரிவத்தனை செய்யும் நபர்களுக்கு அசத்தலான சலுகைகளும் கேஷ்பேக் ஆகியவற்றை வழங்கி வருகின்றது.

Also Read – Cinema News – ஹரார் படமான ஏலியன்: ரோமுலஸ் OTT தேதி அறிவிப்பு

இந்நிலையில், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் தனது சூப்பர் பிரீமியம் பிரைவேட் கிரெடிட் கார்டு தவிர மற்ற அனைத்து கிரெடிட் கார்டுகளிலும் மாற்றம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

கிரெடிட் கார்டு வழியாக ரூ.20,000 வரை ஆன்லைனில் செலவு செய்யும் செலவுகளுக்கு 3 மடங்கு ரிவார்டு புள்ளிகள் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது 6 மடங்காக உயர்த்தியுள்ளது. இத்தகைய வரம்பிற்கு கீழ் இருக்கும் பில்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லை. இத்தகைய வரம்பிற்கு மேல் உள்ளவர்களுக்கு 1 சதவீத கிரெடிட் கார்டு கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் ஜாயின் பண்ணிடுங்கள்.

Scroll to Top