Site icon Trending News360

பிரபாஸும், திரிஷாவும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்

பிரபாஸும், திரிஷாவும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்

தமிழக திரை உலகில் முன்னணி நடிகைகளில் திரிஷாவும் உள்ளார். 21 ஆண்டுகளாக தன்னுடைய நடிப்பு திறமையால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து மக்கள் அனைவரிடமும் பெரும் வரவேற்ப்பை பெற்றவர் திரிஷா. இப்போது, குட் பேட் அக்லி, விடாமுயற்சி மற்றும் கமல்ஹாசனின் தக் லைப் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் நடிப்பில் ஆர்வர் காட்டி வருகிறார் திரிஷா. மலையாளத்தில் இரண்டு படங்களிலும், தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா படங்களிலும் நடித்து வருகிறார்.

Also Read: Gold Rate Today – 1 பவுன் தங்கம் விலை இன்று

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து கொண்டிருக்கும் திரிஷா தற்போது பிரபாஸுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். இப்படத்தை சந்தீப் ரெட்டி இயக்க உள்ளார். தற்போது ராஜா ஷாப் என்ற படத்தில் பிரபாஸ் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படம் முடிந்தவுடன் புதிய படம் ஆரம்பிக்க உள்ளது. ஏற்கனவே திரிஷா பிரபாஸுடன் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடதக்கது.

Exit mobile version