இஸ்லாமிய நாடுகளில் ஒன்று தான் ஈரான். இந்த நாட்டில் உள்ளவர்கள் இஸ்லாமிய சட்ட திட்டங்களை கடைப்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக அங்குள்ள பெண்கள் கட்டாயம் ஹிஜாப் ஆடையை அணிந்து தான் வெளியே கூட வர வேண்டும். ஆனால் சமீப காலமாகவே ஹிஜாப் ஆடை அணிவதை அங்குள்ள பெண்கள் தங்களது எதிர்ப்பை தெரவித்துள்ளனர்.
இதனிடையில், ஹிஜாப் விதியை எதிர்க்கும் பெண்களுக்கு மனநல சிகிச்சை கொடுப்பதற்காக மனநல சிகிச்சை மையத்தை (கிளினிக்) திறக்கப்போவதாக ஈரான் அரசு தற்போது பகீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த கிளினிக்குகளில் ஹிஜாப் ஆடை விதியை எதிர்க்கும் பெண்களுக்கு அறிவியல் மற்றும் உளவியல் ரீதியான சிகிச்சைகள் கொடுக்கப்படும் என அந்நாட்டு மகளிர் மற்றும் குடும்பத் துறையின் தலைவரான மெஹ்ரி தலேபி தரேஸ்தானி கூறியுள்ளார்.
Also Read – CUTN-தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை அறிவிப்பு! கடைசி தேதிக்குள் ஈமெயில் வழியா அப்ளை பண்ணிடுங்க…!
ஆடை என்பது பெண்களின் சுதந்திரம் ஆகும். ஆனால் இந்த ஈரான் நாட்டின் முடிவு அந்நாட்டின் பெண்கள் மற்றும் மனித உரிமைகள் குழுக்களிடையே கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஈரான் பத்திரிக்கையாளர் கூறுகையில், ஹிஜாப் அணிய மறுப்பது ஒரு மன நோய் எனவும், இதற்கு பெண்களை குணப்படுத்த கிளினிக்குகளை அமைக்க வேண்டும் என்ற யோசனையே மிக ஆபத்தானதாகும். அங்கு ஆளும் நபர்களுக்கு ஒரு சித்தாந்தம் உள்ளது. அதாவது தங்களது விதியை ஏற்க மறுக்கும் நபர்களை தனிமைப்படுத்தவே இதைச் செய்கிறார்கள் என இவ்வாறு கூறியுள்ளார்.
செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் ஜாயின் பண்ணிடுங்கள்.