நடிகர் இளையதளபதி விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இக்கட்சியின் முதல் மாநாடானது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி அன்று மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருகை புரிந்தனர். அந்த கூட்டத்தில் உரையாடிய விஜயின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக இருந்தது. தற்போது த.வெ.க அடுத்தக்கட்டமாக 2026ஆம் ஆண்டில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.
Also Read – ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் சொர்கவாசல்…! டிரெய்லர் நாளை வெளியீடு! படக்குழு அறிவிப்பு…!
இந்நிலையில், த.வெ.க மாநாட்டிற்கு நிலம் கொடுத்தவர்களை கவுரவிக்கும் வண்ணமாக அவர்களை அழைத்து அவர்களுக்கு விருந்து அளிக்க உள்ளார். இந்நிகழ்ச்சி சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் ஜாயின் பண்ணிடுங்கள்.