தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் (DHS) வேலை | 12th, B.Sc, Diploma, DMLT படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

Thanjavur DHS Recruitment 12th, B.Sc, Diploma, DMLT candidates can apply

Thanjavur DHS Recruitment: தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் (District Health Society) லேப் டெக்னீசியன், ஹெல்த் விசிட்டர், லேப் சூப்பர்வைசர் ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு மொத்தம் மூன்று (03) காலி பணியிடங்கள் தேவைப்படுகின்றது. 12th, B.Sc, Diploma, DMLT ஆகிய படிப்புகளில் தேர்ச்சி அடைந்தவர்கள் இந்த வேலைகளுக்கு அப்ளை செய்யலாம்.

நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.13,000 முதல் ரூ.19,800 வரை வழங்கப்படும். மேலும், பணியாளர்கள் தஞ்சாவூர் மாவட்டத்திலே பணியமர்த்தப்படுவார்கள்.

Also Read – தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை! பள்ளிக் கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு!!

Thanjavur DHS அறிவித்த அறிவிப்பின்படி Senior TB Lab Supervisor வேலைக்கு விண்ணப்பதாரர் B.Sc/Diploma in Medical Lab Technology படிப்பை படித்திருக்க வேண்டும். Lab Technician வேளைக்கு விண்ணப்பதாரர் Diploma in Medical Lab Technology படிப்பை படித்திருக்க வேண்டும். TB Health Visitor வேலைக்கு B.Sc degree or 12th Pass படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் எந்தவொரு விண்ணப்பக்கட்டனமும் செலுத்த தேவையில்லை. மேலும் பணியாளரின் வயது வரம்பு குறித்து எந்த தகவலும் அறிவிக்கவில்லை.

மாவட்ட சுகாதார சங்கத்தில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை அஞ்சல் வழியாக கீழே கொடுக்கபப்ட்டுள்ள முகவரிக்கு நவம்பர் மாதம் 23ஆம் தேதிக்குள் அப்ளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

முகவரி

Deputy Director of Health Services (TB), District TB Centre,
Raja Mirasdar Hospital Campus,
Thanjavur-613001.

Official Notification
Application Form

Scroll to Top