தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் எண்ணற்ற இளைஞர்கள் அரசு வேலையில் பணியமர்த்தப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகளை நடத்துகிறது TNPSC.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் கோபால சுந்தரராஜ் நேற்று ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டார். அந்த செய்தி குறிப்பில் அவர் கூறியிருந்ததாவது…
Also Read: தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை! பள்ளிக் கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு!!
சமூக நீதியை வலுபடுத்த 2024 ஆம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி. ஒருங்கிணைந்த என்ஜினியரிங் பணிகள் தேர்வு மூலம் பட்டியலின, பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப 50 தேர்வர்களை தேர்வு செய்து உள்ளது. 2024 ஆண்டில் க்ரூப்-1 தேர்வு மூலம் 12 பின்னடைவு காலியிடங்கள், க்ரூப்-2 2ஏ தேர்வு மூலம் 135 பின்னடைவு காலிப்பணியிடங்கள், க்ரூப்-4 தேர்வு மூலம் 434 பின்னடைவு காலிப்பணியிடங்கள் என மொத்தம் 581 பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப பணிகளிலும் பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.