நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எப்.ஐ.ஆர் படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் தற்போது மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் ஆர்யா நாயகனாக நடித்துள்ளார். சரத்குமார், மஞ்சு வாரியர், அனேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் முக்கிய ரோலில் கவுதம் கார்த்திக் நடித்துள்ளார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு திபு நிபுணன் தாமஸ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட இப்படக்குழு திட்டமிட்டுள்ளது.
Also Read – பொங்கல் பரிசாக 2 ஆயிரம்…! கூட இந்த பொருளும் தராங்களாம்..!
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரையில் வெளியிடப்படும் என தகவல் வந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சீக்கிரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் ஜாயின் பண்ணிடுங்கள்.