Site icon Trending News360

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

தங்கம் வாங்க முடியுமா? என்று நினைப்பவர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு. இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள். தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வருகிறது. இது நகை பிரியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே தான் இருந்தது. கடந்த மாதம் மட்டும் புதிய உச்சமாக ரூ. 59 ஆயிரத்தை கடந்து காணப்பட்டது. தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக சரிவை சந்திந்து வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ.56,360 க்கு விற்பனை செய்யப்பட்டது.

Also Read: Cinema News – மறுபடியும் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்

தங்கத்தின் விலை இன்று மேலும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.55,480 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.6,935 விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2 குறைந்து ரூ.99 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Exit mobile version