நம்முடைய வாழ்கையில் போன் என்பது ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் போன் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேம் விளையாடுவது, ரீல்ஸ் பார்ப்பது, மூவி பார்ப்பது, சோசியல் மீடியா மூலமாக சாட்டிங் செய்வது என பல வகைகளில் இந்த போனை பயன்படுத்தி வருகிறார்கள் மக்கள்.
தற்போது ஆன்ட்ராடு போன் பயன்படுத்துபவர்களுக்கு புதிய எச்சரிக்கை ஒன்று வந்துள்ளது. இந்த எச்சரிக்கையை சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அறிவித்துள்ளார்கள்.
Also Read: அண்ணா பல்கலைகழக வேலைவாய்ப்புகள் அறிவிப்பு
நம்பிக்கை இல்லாத தளத்தில் இருந்து ஏதேனும் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும் போது TOXICPANDA என்ற செயலியும் ரகசியமாக பதிவிறக்கம் ஆவதாகவும், அந்த செயலி மூலமாக உங்களுடைய மொபைல் போனை தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வருகிறார்கள் மர்ம நபர்கள். இதன் மூலம் ரகசியமாக வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விடுவதால் கவனமாக இருக்கும்படி கூறியுள்ளனர் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள்.
உங்கள் போனில் எந்த ஆப் இன்ஸ்டால் செய்தாலும் கவனமுடன் இன்ஸ்டால் செய்யுங்கள்.