Chance of Heavy Rain in 11 Districts of Tamil Nadu
தமிழகத்திலே மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், தற்போது தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளின் மேலே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. இதனால் நாளைய தினம் (நவம்பர் 7) முதல் தமிழகம், காரைக்கால், புதுவை ஆகிய இடங்களில் மிதமான மற்றும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
Also Read – கங்குவா படத்தின் வைரலாகும் அப்டேட் – ‘இன்னும் 8 நாட்கள்’
மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர்,சென்னை, நாகப்பட்டினம் மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் என மொத்தம் 11 மாவட்டங்களில் நாளைய தினத்தில் ((நவம்பர் 7) கனத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, சூறாவளி காற்றானது மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வரும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.