துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் | படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அப்டேட்…!

Dulquer Salmaan's Lucky Bhaskar Movie's OTT release date update

தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். பெரும்பாலும் இவர் தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் படங்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைக்கின்றது. இவர் நடிப்பில் வெளியான சீதா ராமம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனையடுத்து கிங் ஆப் கோதா கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது .

அதனையடுத்து, வெங்கி அட்லுரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Also Read – தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களை கவுரவிக்கும் தலைவர் விஜய்…!

இப்படமானது தீபாவளி பண்டிகை தினத்தன்று ரிலீஸ் ஆனது. வசூல் ரீதியாவும் மற்றும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஓ.டி.டி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நவம்பர் 30ஆம் தேதி அன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் ஜாயின் பண்ணிடுங்கள்.

Exit mobile version